புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி எல்கைப் பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
திருமயம் அடுத்த பரளியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 28 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
போட்டியில் இலக்கை நோக்கி மாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடியதைச் சாலையின் இருபுறங்களில் நின்றபடி திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.