இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு ஆலோசனைகளை சுகாதாரத்துறை மக்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், குறிப்பாக வடமேற்கு இந்தியாவில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.