வட இந்தியர்கள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வட இந்தியாவில் ஒளிபரப்பப்படும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட இந்தியர்கள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வட இந்தியாவில் ஒளிபரப்பப்படும் எனக் கூறினார்.
திமுக அமைச்சர்கள் மீது பாஜக சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தை விட்டு திமுக துரத்தி அடிக்கப்படும் எனவும் ஹெச்.ராஜா கூறினார்.