சேலம் லயன்மேடு பகுதியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை திமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லயன்மேடு பகுதியில் இரண்டு சிறுமிகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள், சிறுமிகளின் பர்தாவைக் கழற்றச் சொல்லி அதை வாங்கி செல்ல முயன்றனர். இதைக் கண்ட நபர் ஒருவர் சிறுவர்களிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்காததால் காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன், சிறுவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது, தடுத்து நிறுத்திய திமுக நிர்வாகி ராமலிங்கம், பொதுமக்கள் முன்னிலையில் மணிகண்டனை மிரட்டினார். தங்கள் ஆட்சி நடந்துகொண்டிருப்பதாகக் கூறி அவர் மிரட்டியது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்தது.