புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்த பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2014ஆம் ஆண்டு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாகனம் மோதி, ராமமூர்த்தி என்பவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது.
இவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இழப்பீடு வழங்கவில்லை. இதனையடுத்து புதுக்கோட்டைச் சார்பு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படவே, வட்டியுடன் சேர்த்து 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
அந்த தொகையும் வழங்கப்படாததால், பொதுப் பணித்துறை அலுவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்யச் சென்றனர். அப்போது, இழப்பீடு தொகையை வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.