சென்னையில், திருமணத்திற்குப் பெண் மறுத்ததால், அவருடன் தனிமையில் இருந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த். இவர் மாங்காடு அடுத்த மௌலிவாக்கம், ராஜராஜன் நகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் முதல் மனைவி உடன் விவாகரத்து ஆனது. இதையடுத்து இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனந்தின் நடவடிக்கை பிடிக்காமல் அந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் மது அருந்திவிட்டு வந்து அவரை தாக்கியுள்ளார்.
இதனால் கைது செய்யப்பட்ட ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோவை உறவினர்களுக்கு ஆனந்த் அனுப்பியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.