கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, வா்த்தகக் கப்பல்களை ராணுவப் பயன்பாட்டில் ஈடுபடுத்துவதை நிறுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான புதிய பேச்சுவாா்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் துபாயில் மேற்கொண்டனர்.
அதனைதொடர்ந்து கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.