சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சமீபத்தில் அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தத் தீர்ப்பு பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது.
விசாரணையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு வருத்தத்தை ஏற்படுத்துவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் இந்த தீர்ப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிராகவும், மனிதாபிமானமற்ற அணுகுமுறையைச் சித்தரிப்பதாகவும் கூறிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், உத்தரப்பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.