கோவாவில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், காலநிலை மாற்றத்தால் பல்வேறு பகுதிகளில் அதீத மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோவா மாநிலத்தின் பனாஜி, சத்தாரி மற்றும் சான்குவெலிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில், ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.