ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில்வே தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். பாம்பன் கடலில் உள்ள பழைய ரயில் தூக்கு பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பாலத்தை அகற்றுவதில் சிரமம் இருப்பதாகவும் அதனை அகற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையேயான ரயில் சேவை பணிகள் குறித்து நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாநில அரசுடன் பேசி விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.