சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் கோயில் அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காடையாம்பட்டி அருகேயுள்ள அய்யன் காட்டுவளவு பகுதியில் கருப்பனார் சாமுண்டீஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகேயுள்ள அரசு நிலத்தை இஸ்லாமிய மக்களின் தொழுகைக்காக தாசில்தார் நாகூர் மீரான் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், அங்கு ஏற்கனவே பன்றி, ஆடு ஆகியவற்றைப் பலியிட்டு வழிபாடு நடத்தி வருவதாகக் கூறியுள்ளனர். கோயிலுக்கு அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கினால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் எனக்கூறிய அப்பகுதி மக்கள், இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.