தென்மண்டல மொத்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் சிலிண்டர்கள் விநியோகத்தை பாதிக்காது என தமிழ்நாடு-புதுச்சேரி எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், எல்பிஜி நுகர்வோர்களுக்கு போதுமான LPG சிலிண்டர்களை விநியோகிப்பதாக ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
OMCக்களுக்கு அவர்களது பாட்டிலிங் ஆலைகளில் மொத்த LPG ஸ்டாக்குகள் உள்ளதாகவும் இதனால் எப்போதும் போல LPG விநியோகஸ்தர்கள் தங்களது சேவையைத் தொடர்வார்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர்களின் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக LPG தேவையை தடையின்றி அளிப்பதில் முனைப்புடன் இருப்பதாக உறுதியளித்துள்ள எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தடையின்றி LPG சிலிண்டர்களை வினியோகிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளனர்.