செந்தூர், செங்கோட்டை விரைவு ரயில்கள் பூதலூர் மற்றும் சிதம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் இடையேயான செந்தூர் விரைவு ரயில் பூதலூர் ரயில் நிலையத்திலும், தாம்பரம் – செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுப்பிய பதில் கடிதத்தில், செந்தூர், செங்கோட்டை விரைவு ரயில்கள் பூதலூர் மற்றும் சிதம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.