'MAKE IN INDIA' திட்டத்தின் மைல்கல் : உள்நாட்டின் முதல் MRI SCAN தயாரிப்பு - சிறப்பு தொகுப்பு!
Aug 16, 2025, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘MAKE IN INDIA’ திட்டத்தின் மைல்கல் : உள்நாட்டின் முதல் MRI SCAN தயாரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Mar 30, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்கேன் செலவை 30 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைக்கும் வகையில், இந்தியா தனது முதல் உள்நாட்டு MRI இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நாட்டின் முதல் MRI இயந்திரத்தின் இறுதி கட்ட பரிசோதனைகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்படவுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

காந்த அதிர்வு இமேஜிங் இயந்திரமான MRI, பல்வேறு நோய்களைக் கண்டறிவதற்கான ஒரு சிறந்த நோயறிதல் கருவியாகும். உடலின் உட்புறப் பகுதிகளைத் துல்லியமாக படம் பிடிக்க MRI இயந்திரம் பயன்படுகிறது. பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு பெரிய காந்தப்புலங்களை உருவாக்கும் காந்தங்களையே MRI இயந்திரம் பயன்படுத்துகிறது. இந்த காந்தங்களில் குளிரூட்டியாக ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.

MRI-க்கான உலகளாவிய சந்தையின் பெரும்பகுதியை GE ஹெல்த்கேர், பிலிப்ஸ் மற்றும் சீமென்ஸ் ஆகிய நிறுவனங்களே வைத்துள்ளன. ஜப்பானின் ( Toshiba ) தோஷிபா மற்றும் (Hitachi ) ஹிட்டாச்சி ஆகிய நிறுவனங்களும் MRI கருவியை உற்பத்தி செய்து வருகின்றன.

இந்தியா தற்போது சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து எம்ஆர்ஐ இயந்திரங்களை இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் தற்போது சுமார் 3500 MRI இயந்திரங்கள் உள்ளன. ஒன்றரை டன் MRI இயந்திரம் என்றால் 6 கோடி ரூபாயும், 3 டன் MRI இயந்திரம் என்றால் 10 கோடி ரூபாயும் செலவாகிறது.

இந்தியாவில் சுமார் 8000 MRI இயந்திரங்கள் தேவை என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதற்குப் பெரிய முதலீடுகள் தேவைப்படுவதோடு, சாதாரண மக்களுக்கு ஸ்கேன் செலவும் மிக அதிகமாகும்.

மருத்துவ சாதனத் துறையில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, தேசிய மருத்துவ சாதனக் கொள்கையை 2023ம் ஆண்டு, மத்திய அரசு அறிவித்தது. மருத்துவ தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைவதே இந்த கொள்கையின் நோக்கமாகும்.

தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மருந்தியல், மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டுத் (PRIP) திட்டத்துக்கான நிதியை 200 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ( MeitY) மேக் இன் இந்தியாவின் ஒரு பகுதியாக MRI இயந்திரத்தை உள்நாட்டில் தயாரிக்கும் SCAN ERA திட்டத்தை செயல்படுத்தியது.

ஏற்கெனவே, இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் MRI இயந்திரங்களில் பயன்படுத்தப்படும், இந்தியாவின் முதல் உயர் காந்த அமைப்பை 2022 ஆம் ஆண்டில்,வெற்றிகரமாக உருவாக்கினர்.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா தனது முதல் உள்நாட்டு MRI இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. வரும் அக்டோபருக்குள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இறுதி கட்ட பரிசோதனை தொடங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த சாதனை மூலம், இறக்குமதியை சார்ந்திருப்பது 85 சதவீதம் குறையும் என்றும், ஸ்கேன் செலவும் 30 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறையும் என்று கூறப் பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் உட்பட தேவைப்படும் எல்லா இடங்களிலும் இந்த இயந்திரங்கள் அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

2014ம் ஆண்டு தொடங்கிய MRI இயந்திரங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான மேக் இன் இந்தியா முயற்சி, வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது,மருத்துவ தொழில்நுட்பத்தில் இந்தியாவின் குறிப்பிடத் தக்க மைல் கல்லாகும்.

Tags: first indigenous MRI machineMRI machineMagnetic resonance imagingPM ModiIndiaMake in indiaAIIMS Delhi
ShareTweetSendShare
Previous Post

திருவாடானை அருகே மாட்டு வண்டிப்பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

Next Post

எம்புரான் திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் – வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies