திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாயக்கழிவு சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் சிறப்பானவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
120 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ஜவுளிக் கழிவுகள், உலகம் முழுவதற்கும் கவலை அளிக்கும் முக்கிய காரணமாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
பழைய ஆடைகளை களைந்துவிட்டு புதிய ஆடைகளை வாங்குவது உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, மக்கள் அணியும் பழைய ஆடைகளின் உபயோகத்தை நிறுத்தவதன் மூலம் அவை ஜவுளிக் கழிவுகளாக மாறுவதாக தெரிவித்தார்.
உலகின் அதிகபட்ச ஜவுளி கழிவுகள் உருவாகும் மூன்றாவது நாடு இந்தியா என கூறிய பிரதமர் மோடி, இதனை சமாளிக்க இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல பாராட்டத்தக்க முயற்சிகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
அரியானாவில் உள்ள பானிபட், ஜவுளி மறுசுழற்சிக்கான உலகளாவிய மையமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி பெங்களூரு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுடன் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்நாட்டின் திருப்பூர், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஜவுளி கழிவு மேலாண்மையில் ஈடுபட்டுள்ளது சிறப்பானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.