தமிழகத்தில் 6 இடங்களில் சதமடித்த வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 6 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு, வேலூர், கரூர், மதுரையில் தலா 101 டிகிரி பாரன்ஹீட்டும், தருமபுரியில் 100 டிகிரி ஃபரான்ஹீட்டும் வெப்பம் பதிவானது.
வெப்ப அலையால் கடும் அவதிக்குள்ளான மக்கள் குளிர்பான கடைகளில் குவியத் தொடங்கினர். இதேபோல நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
தெலங்கானாவின் அதிலாபாத், ஒடிசாவின் பௌத் பகுதிகளில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.