பள்ளி மாணவர்களுக்கு அனைத்து மதங்களின் அடிப்படை புரிதலை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மதுக்கரையில் நடைபெற்ற பள்ளி விழாவில் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா என்னவாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து பள்ளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாட்டில் ஊழல் எனும் பெருச்சாளியை ஒழிக்க ஒவ்வொரு மாணவ, மாணவியும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார். அனைத்து மதங்களின் அடிப்படை புரிதலை சொல்லிக்கொடுக்கும் போது, பள்ளியில் இருந்தே சகோதரத்துவம் பேணி பாதுகாக்கப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.