தஞ்சை மாவட்டம், கும்பகோணம் திருநரையூர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள சனிபகவானுக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், திருநரையூர் ராமநாதசுவாமி கோயிலில், இரு மனைவிகள் மற்றும் இருமகன்களுடன் குடும்ப சகிதமாக சனிபகவான் அருள் புரிந்து வருகிறார்.
இந்நிலையில், சனிபெயர்ச்சியையொட்டி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மந்தாதேவி மற்றும் ஜேஷ்டா தேவி ஆகியோருக்கு சனீஸ்வரர் மங்கல நாண் அணிவித்தார். இந்த நிகழ்வில் ஜப்பானைச் சேர்ந்த சிறுவன் தமிழில் பக்தி பாடல் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.