மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 103 மருந்துகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில், சளி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 103 மருந்துகள் தரமற்றவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.