நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் இந்தியா வந்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம் சந்தித்தார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள காஸ்பர் வெல்ட்காம்பை அன்புடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணம் இந்தியா-நெதர்லாந்து பன்முக உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் பதிவிட்டுள்ளார்.