சென்னை அடுத்த திருவேற்காட்டில் வீடு புகுந்து லேப்டாப், செல்போன்களை திருடிச் சென்ற வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அயனம் பாக்கம், கோலடி பகுதிகளில் நள்ளிரவில் வீடு புகுந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக திருவேற்காடு காவல் நிலையத்திற்குப் புகார்கள் வந்தன.
இதனை அடுத்து, திருடுப் போன இடங்களிலிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளைக் கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த, ராமச்சந்திரன், ஜனார்த்தனம் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், 26 செல்போன்கள், 3 லேப்டாப்-க்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.