சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், வழக்கறிஞரான வெங்கடேசன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோர் தங்கியிருந்தனர்.
அண்மையில் அவரது வீடு பூட்டியிருந்த நிலையில் துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேசன் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார் ஓட்டுநர் கார்த்திக் மற்றும் ரவி ஆகிய இருவரை நாங்குநேரியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.