தெலங்கானாவில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் தமிழக பெண்கள் கலந்துகொண்டு அசத்தினர்.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு தாடிபத்திரி தொகுதியில் பெண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது.
இதில், 100 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட நெல்லை பணக்குடியைச் சேர்ந்த லெஜின் முதல் பரிசையும், ராஜகுமாரி 2-வது பரிசையும் தட்டிச் சென்றனர். வெற்றிபெற்ற இருவருக்கும் தொகுதி எம்.எல்.ஏ பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.