திருப்பத்தூரில் முகப்பு விளக்கின்றி ஆபத்தை உணராமல் இயக்கப்பட்ட அரசு பேருந்தால், பயணிகள் அச்சம் அடைந்தனர்.
திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திர எல்லையான தொட்டிகிணறுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இரவு நேரத்தில் முகப்பு விளக்கின்றி இப்பேருந்து இயக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆபத்தை உணராமல் இயக்கப்படும் அரசு பேருந்தால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற மெத்தனப் போக்கான செயல்களை துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.