பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக தாய்லாந்து புறப்பட்டார்.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளை தாய்லாந்தில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து புறப்பட்டார். இந்த உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனஸ் ஆகியோரும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.