டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.பி. தம்பிதுரை நேரில் சந்தித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் ஓசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.பி. தம்பிதுரை நேரில் சந்தித்தார். தொடர்ந்து அவரிடம் ஒசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஒசூரில் சாலை போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார் .