கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஏழாம் படை வீடான மருதமலை முருகன் கோயிலில் கடைசியாக 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 31ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா நடைபெற்றது. ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்ட நிலையில், விழாவைக் காணப் பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவை- மருதமலை சாலையில் வரும் 6ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.