புதுச்சேரியில் இணைய மோசடி மூலம் 5 கோடியே 10 லட்சம் ரூபாயைச் சுருட்டிய வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுவிகியா என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொழிற்சாலையின் உரிமையாளர் அனுப்பியது போன்ற குறுஞ்செய்தியை மர்மநபர்கள் அனுப்பியுள்ளனர்.
அதில், தொழிற்சாலையின் வங்கிக் கணக்கில் இருந்து 5 கோடியே 10 லட்சம் ரூபாயை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்படி கூறியுள்ளனர்.
இதனை நம்பி பணத்தை அனுப்பி வைத்த காசாளர், தான் ஏமாற்றப்பட்டதைத் தாமதமாக உணர்ந்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட மொபிகுல் ஆலம் முலா என்பவரை வங்கதேச எல்லையில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.