நெல்லை மாவட்டம், சேர்வலாறு அணைக்குச் செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் வன விலங்குகள் சுற்றித்திரியும் நிலையில் சேர்வலாறு அணைக்குச் செல்லும் பாதையில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றது. இதனை வாகனத்தில் சென்ற சிலர் வீடியோ எடுத்த நிலையில், இணையத்தில் பரவி வருகிறது.