கோவையில் பெண்ணை ஒருவர் தரதரவென இழுத்துத் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
உருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கு இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக அருகிலுள்ள வீட்டு உரிமையாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து அந்த நபர் ரம்யாவை தரதரவென இழுத்து தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் என கூறப்படுகிறது.