தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? எனச் சட்டப்பேரவையில் சுவாரசியமிக்க விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என எம்எல்ஏ அசோகன் கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிவகாசியில் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் இல்லாததால், அதனை விண்ணப்பத்தில் தாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு, தீப்பெட்டி தோன்றியதற்கான ஆவணங்கள் இருப்பதால்தான் அதற்கு நூற்றாண்டு விழா நடத்தப்பட்டதாகக் கூறினார்.
இதனை அடுத்துப் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், தீப்பெட்டி தோன்றியதற்கான ஆவணங்களை அதிமுக உறுப்பினர் தங்களிடம் வழங்கினால், புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.