தாய்லாந்து பயணத்தை நிறைவு செய்து இலங்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தாய்லாந்து சென்றார். உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு புறப்பட்டார். தனி விமானம் மூலமாக இலங்கை சென்றடைந்த அவருக்கு, பாரம்பரிய நடன கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், இலங்கை பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் தனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் தான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தாகவும் கூறியுள்ள பிரதமர் மோடி, நன்றி தெரிவித்துள்ளார்.