1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப்போக அன்றைய ஆளும் கட்சியான திமுகவே காரணம் என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிரந்தர தீர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப்போக அன்றைய ஆளும் கட்சியான திமுகவே காரணம் என குற்றம் சாட்டியுள்ள விஜய், கச்சத்தீவை மீட்க வேண்டுமென திமுக அரசு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தது ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும் விமர்சித்துள்ளார்.
நிரந்தர தீர்வை எட்டும் வரை 99 வருட குத்தகைக்கு கச்சத்தீவை பெறுவதே இடைக்கால தீர்வாக இருக்கும் எனவும், இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு எந்தவித சமரசமும் இன்றி இலங்கை அரசிடம் வலியுறுத்தி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக அமைய வேண்டும் எனவும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.