வக்ஃபு மசோதா விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டை எதிர்த்து அக்கட்சியில் இருந்து இடுக்கி மாவட்ட பொதுச்செயலாளர் விலகியுள்ளார்.
கேரளாவின் இடுக்கி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக பென்னி பெருவானந்தம் என்பவர் பணியாற்றி வந்தார். வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவில் காங்கிரசின் நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
வக்ஃபு மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்ற கிறிஸ்தவர்களின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை எனக்கூறிய அவர், கிறிஸ்தவர்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், இஸ்லாமியர்களை திருப்திபடுத்துவதற்காகவே காங்கிரஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக பென்னி பெருவானந்தம் குற்றம்சாட்டியுள்ளார்.