பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே மரம் முறிந்து விழுந்து வாகனங்கள் சேதமடைந்தன.
மகாதேவபுரா, ரிச்மண்ட் டவுன், சாந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மகாதேவபுரா பகுதியில் கனமழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.