சென்னை அருகே இரும்பு கம்பெனி உரிமையாளரை திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டளை ஊராட்சி, ராகவேந்திரா நகர்ப் பகுதியில் மதன் என்பவரது பழைய இரும்பு குடோன் உள்ளது. இந்த குடோன் மீதும், அதன் அருகே உள்ள கல் அறுக்கும் ஆலை மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
இது குறித்து விசாரிக்க வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது இரண்டாம் கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா தேவியின் கணவர் சுகுமாரும் உடன் சென்றிருந்தார்.
அப்போது மதன் மற்றும் சுகுமார இடையே வாக்குவாதம் ஏற்படவே, கோபமடைந்த சுகுமார மதனைக் காலால் எட்டி உதைத்துள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.