பிரதமரை புறக்கணித்த முதல்வரைத் தமிழக மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
பிரதமர் தமிழக மீனவர்கள் பிரச்சனையைத் தீர்த்துவிட்டு நாடு திரும்பினார் என்றும் பிரதமரை வரவேற்காமல் குளு குளு ஊட்டி முதலமைச்சருக்கு தேவையா என அவர் கேள்வி எழுப்பினார்.
நாக் அவுட் ஆகப்போகிறவர் டக் அவுட்டை பற்றிப் பேசுகிறார் என்றும் பிரதமரைப் புறக்கணித்த முதலமைச்சரை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் மொழிக்கு முக்கியத்துவமளித்து தமிழில் கையெழுத்திடும்படி பிரதமர் கூறினார் என அவர் தெரிவித்தார்.
இனி தமிழக மக்களை மொழியை வைத்து ஏமாற்ற முடியாது என்றும் கைது நடவடிக்கையைக் கண்டதும் தவெக-வினர் தெறித்து ஓடினார்கள் என என அவர் கூறினார்.