பிரதமர் தலைமையிலான அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலகிரிக்குச் சுற்றுலா சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் நாட்டின் முதல் செங்குத்து பாலத்தை பாம்பனில் திறந்து வைத்துள்ள பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி பணிகளையும் தொடங்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மாநில அரசின் நிகழ்ச்சியை ஒரு காரணமாகக் கூறிக்கொண்டு, நீலகிரிக்குச் சுற்றுலா சென்றுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்த சர்வாதிகார அணுகுமுறை 2026-ல் திமுக-வை வெளியேற்ற வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், 2026 தேர்தலில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் திறமையான தலைவரைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மாற்றத்திற்கான கவுண்ட் – டவுன் தொடங்கிவிட்டதாகவும் அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.