கச்சத்தீவு விவகாரம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுக்கும் இடத்தில் திமுக இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பிரதமர் மோடிக்காக அரசியலுக்கு வந்தவன் நான் என்றும் பிரதமர் மோடியின் சொல்லுக்கு எப்போதும் கட்டுப்படுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
பாம்பன் பாலம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது என்றும் இலங்கை சுதந்திர சதுக்கத்தில் நிகழ்ச்சி நடத்தி பிரதமர் மோடியைக் கவுரவித்தது இலங்கை அரசு என அவர் கூறினார்.
இலங்கை கைது செய்த தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கப் பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும் கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி, இலங்கை அதிபர் பேசியது பற்றி விவரங்கள் வெளியாகவில்லை என அவர் தெரிவித்தார்.
கச்சத்தீவு விவகாரம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் திமுக இல்லை என்றும் களத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பதால் பாஜக தொண்டர்களுடன் நிற்பேன்… போராடுவேன் என்றும் திமுக-வின் ஊழல் முறைகேடுகளை இன்னும் உரக்கப் பேசுவோம் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.