மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால், தண்டலை, குமாரம், அரியூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.