புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போக்குவரத்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் 265 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஒப்பந்த தொழிலாளர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.