பல்கலைக் கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கி விட்டால் பொம்மை அளவிற்கு அவர்கள் செயல்படும் நிலை உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு சரியானது அல்ல எனப் பதிவிட்டுள்ள அவர், இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்து அதிகாரங்களையும் உச்சநீதிமன்றம் கையில் எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகத் தெரியவில்லை எனப் பதிவிட்டுள்ள கிருஷ்ணசாமி, நீதிமன்றம் தனது எல்லையைத் தாண்டி தீர்ப்பு வழங்கியுள்ளதாக விமர்சித்துள்ளார்.