பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷரிஃபுல் இஸ்லாம் மீது ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பாந்த்ரா நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் அடையாளம் தெரியாத நபர் வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் காயமடைந்தார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஷரிஃபுல் இஸ்லாம் என்பவரைக் கைது செய்தனர். இந்நிலையில், ஷரிஃபுல் மீது மும்பை பாந்திரா நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை மஹாராஷ்டிரா போலீசார் தாக்கல் செய்தனர்.