இரண்டாம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தினத்தில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
2ஆம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்ட தின அணிவகுப்பு ரஷ்யாவில் மே 9ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான அழைப்புக் கடிதத்தைப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.