தஞ்சை அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவம் நடப்பதற்கு முன்னரே புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய உறவினர்கள் பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாபட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி தீர்க்கரசுவை நிலம் தொடர்பான பிரச்சனையில் நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்நிலையில் தீர்க்கரசு உயிருக்கு ஆபத்து இருப்பதாக முன்பே புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முக்கிய குற்றவாளி திருக்குமார் என்பவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கிராம மக்கள்,உறவினர்கள் உள்ளிட்டோர் பாப்பா நாடு காவல் நிலையம் முன்பு பாடைகட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.