சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து கோயிலில் நாள்தோறும் பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.