சிவகங்கையில் நடைபெற்ற பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள உருவாட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற பெரிய நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பெரிய நாயகி அம்மன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். தொடர்ந்து அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு ரத வீதிகள் வழியாகத் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.