நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்து சேதமடைந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை எனக் கூறி அவரை ராஜினாமா செய்யக்கோரி நாமக்கல் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொட்டணத்தில் உள்ள அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறையில் இருந்த பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரொக்கப் பணம் தீயில் கருகிச் சேதமடைந்தது. தீ விபத்து குறித்து போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.