வேலூர் மாவட்டத்தில் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் கனமழை கொட்டி தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், வரும் 14ஆம் தேதி வரை வழக்கத்தை விட அதிகப்படியான வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. வேலூரில் பகல் நேரத்தில் 105.1 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை காணப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் வெப்ப தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.