தேச மற்றும் இந்து விரோத கருத்துக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தியுள்ளதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநாட்டில் முதலமைச்சர்கள் ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
இந்த மாநாட்டில் ஆக்கப்பூர்வ விஷயங்கள் எதுவும் பேசப்படவில்லை எனவும் இந்து மற்றும் தேச விரோத கருத்துக்கள் மட்டுமே பேசப்பட்டதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இந்துக்கள் மற்றும் இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டபோது கம்யூனிஸ்ட்கள் வாய்மூடி மவுனமாக இருந்ததாகவும் விமர்சித்துள்ளார்.
திமுகவிடம் இருந்து நிதிபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கார்ப்பரேட்களுக்கு எதிராக குரல் எழுப்புவதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது சித்தாந்த்தை குழி தோண்டி புதைத்துவிட்டு திமுக மற்றும் திராவிட கழகத்தினருக்கு ஊது குழல் போல செயல்படுவதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்
இந்து விரோத மற்றும் தேசிய விரோத கருத்துகளை பேசி மாநாட்டை நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.